இலங்கையை திணறடிக்கும் இந்திய பந்துவீச்சு!

 

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இலங்கை அணி 238 ரன்கள் பின்தங்கியுள்ளது.

 

இந்திய அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதார் சிறப்பாக செயல்பட்டு தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கை அணி ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் காணப்படுகிறது.

Read Previous

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

Read Next

யாசகம் பெற்ற மூதாட்டி வீட்டில் ரூ.8.4 லட்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular