இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் அவர்கள், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை கடந்தாண்டு இலங்கையில் நடத்தியது போல், இந்த ஆண்டு மலேசியாவிலும் நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரப்பும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என நேற்று(18.01.2025) அவர் அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து, தற்போது தமிழ் மொழியை மேலும் சிறப்பிக்கும் வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட கலாசார மையத்திற்கு “திருவள்ளுவர் பன்னாட்டு மையம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெருமையுடன் கூறியிருப்பதாவது, ” யாழ்ப்பாண கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பன்னாட்டு மையம் என பெயர் சூட்டியுள்ளது வரவேற்கிறோம். இந்தியா-இலங்கை மக்களுக்கு இடையேயான, கலாச்சார, நாகரீக பிணைப்புக்கு இது ஒரு சான்றாகும்” என கூறியுள்ளார்.




