இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக களமிறங்க உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தத் தொடர் முக்கியமானதாக இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.




