திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஆக.30) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜ்கமல் என்பவர் மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அவர் தப்பிக்க முயன்ற நிலையில், அந்த கும்பல் ராஜ்கமலை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது. அவர்களை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




