பள்ளி சிறுவனை கடத்த முயற்சி.. வடமாநிலத்தவரை கட்டிவைத்து வெளுத்த மக்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பள்ளிச் சிறுவனை கடத்த முயன்றதாக கூறி வடமாநில நபருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனின் கையை பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது சிறுவன் கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் சென்று, வடமாநில நபரை பிடித்து கட்டி வைத்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கனு சர்க்கார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மன அழுத்தம் இன்றி வாழ வழிமுறைகள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

இளைஞரை கொடூரமாக கொன்ற வழக்கில் 6 பேர் கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular