சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என்று நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். இந்நிலையில் இதெல்லாம் சாப்பிட்ட பிறகு உடனேயே தண்ணீர் குடிக்க கூடாது அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து டைப் 2 சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும். பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. பழங்களில் சர்க்கரை அல்லது சிற்ற்றிக் அமிலம் இருப்பதால் 45 நிமிடங்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம். டீ மற்றும் காபி போன்ற சூடான பானங்கள் அருந்திய பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ தண்ணீர் எடுத்துக் கொண்டால் எடை வாயு மற்றும் அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.




