உங்களிடம் பணம் குவியணுமா..?? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்..!!

பொதுவாகவே எல்லோரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணம் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது.

இந்து சாஸ்திரத்தில் இயற்கையாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

 

இந்த வகையில் இந்த பட்டியலில் பச்சை கற்பூரம் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்தினால் பணத்தை ஈர்க்க முடியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

 

 

கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது?

 

இயற்கையாகவே நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் ஆற்றல் கற்பூரத்துக்கு காணப்படுகின்றது. எனவே உங்களுக்கு அடிக்கடி நிதி பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்றால், கற்பூரத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும்.

 

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கற்பூரம் ஒரு புனிதமான பொருளாக பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி கற்பூரத்தை கொளுத்தும் போது வரும் நெருப்பு எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் தன்மையை கொண்டுள்ளதுடன் கடவுளை திருப்திப்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக தான்  இந்து சடங்குகளிலும் கற்பூரத்தை முக்கியமான மற்றும் புனிதமான பொருளாக பார்க்கின்றனர். இதில் இருக்கும் ஆன்டிபயாடிக் நமது ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது.

 

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கற்பூரத்தை நீங்கள் செல்லும் இடங்களுக்கு எடுத்து சென்றால் பணப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதன் வாசனை மன அழுத்தத்தை போக்கி சிந்தனையை தெளிவுப்படுத்தும் ஆற்றலை கொண்டிருக்கின்றது.

கற்பூரத்தை, ஆண்கள் சட்டை பை அல்லது கால் சட்டையிலும், பெண்கள் தங்கள் பணப்பையிலும் எப்போதும் வைத்திருப்பதன் மூலம் செல்லும் இடங்களில் வேலைகள் தடையின்றி முடிவடையும்.

 

மேலும் கற்பூரத்தை ஒரு சிவப்பு துணியில் கட்டி வெளியே செல்லும்போது உங்களுடன் வைத்துக் கொண்டால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து பணம் மற்றும் அனைத்து செல்வங்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.

Read Previous

அடிப்பிடித்து கருகிப்போன பாத்திரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது?..

Read Next

சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular