சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

Oplus_131072

வேம்பு, அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய நாட்களில் வீட்டின் வாயிலில் நாம் குறிப்பாக மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுவதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இல்லவே இல்லை. அது ஏனென்றால் இந்து மதத்தைப் பொருத்தவரையில் மா மரம் என்பது புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.

#கலசங்கள்:

நீங்கள் நன்கு கவனித்தால் தெரியும். கோவில்களிலோ வீட்டிலோ பூஜையின் போது கலசங்களில் சுற்றுலும் 5 மா இலைகளைச் சொருகி வைப்பார்கள். அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தைத் தெளிப்பார்கள். இந்து மதத்தில் இது மிக முக்கிய சடங்காகப் பார்க்கப்படுகிறது.

#கடவுள் அவதாரங்கள்:

மாம்பழமும், மரமும் இலைகளும் பல கடவுள்களின் அவதாரங்களோடு இந்து மதத்தில் தொடர்பு படுத்தப்படுத்தப்படுகிறது. மாவிலைத் தோரணங்கள் கட்டுவது என்பது பார்வதி, சிவபெருமானின் பிள்ளைகளாகிய பிள்ளையார் மற்றும் முருகப் பெருமானை சுட்டிக் காட்டும் குறியீடு ஆகும். இவர்கள் இருவரும் இந்த மாமரம் தரும் கனிக்காகத் தான் சுற்றித் திரிந்தனர்.

#மரபு:

காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் இதை செய்து வருவதால் நாமும் ஏன் எதற்கு என்று காரணத்தைக் கேட்காமலேயே பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நம்மில் யாருமே ஏன் வீட்டு வாசலிலி மாவிலை தோரணம் கட்டகிறோம் என்பதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவு இல்லை. ஆம். இதில் ஆன்மீக காரணங்களும் சடங்கு முறைகளும் இருக்கின்றன. அதேசமயம் அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது.

என்ன காரணம்?
மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக நம்பப்படுகிறது. அதேபோல் நம்முடைய வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியையும் வெளியேற்றிவிடும். வெளியிலிருந்து வீட்டுக்குள் விடாது என்ற நம்பிக்கையும் உண்டு. அதோடு இது பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.
சுப காரியங்களின் போது
சுப காரியங்களின் போது மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலுமு் கூட கட்டலாம். திருமண வீடுகளில் கட்டும்போது மணப்பெண், மணமகனுக்கும் அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் இது ஆசியை வழங்கவல்லது. கடவுள் அந்த வீட்டைக் காத்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் மாவிலைகள், மா மரம் ஆகியவை மதங்களுக்கான குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மாமரத்தின் கீழ் லிங்கம் இருப்பது போன்று குறியீடுகள் கூட உள்ளன. அதேபோல புத்த கலைகளில் பெரிதும் மாவிலை இருக்கும். புத்த மதத்தில் மா இலைக்கான குளியீடுகளும் அடையாளங்களும் நிறைய உண்டு.

#ஸ்ரவஸ்தி கதை:

புத்த கதைகளில் மா மரம் அறிவின் குறியீடாக காட்டப்படுகிறது. அதே போல் மாமரம், மா இலைகள் என்பவை மறு உற்பத்திக்கான அடையாளமாகவும் ஆண்மைத் தன்மைக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது.
இந்தியாவில் மகாலட்சுமியைக் குறிப்பதாக விளங்குகிறது. அது கெட்ட சக்திகளை விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

#அறிவியல் காரணம்:

வீட்டு முன் கட்டியிருக்கும் மாவிலைகளை நன்கு கவனித்துப் பாருங்கள். அது மற்ற இலைகளைப் போல சீக்கிரம் காய்ந்து போகாது. பசுமையை தன்னுள் அதிகமாக தக்க வைத்திருக்கும் ஒரு தாவரம். பொதுவாக நமக்கு நன்றாகத் தெரியும் ப்சசை தாவரங்கள் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சிக் கொண்டு ஆக்சிஜனை நமக்குக் கொடுக்கும் என்று. அதனால் தான் வாசலிலேயே அதை தோரணம் கட்டிவிடுகிறோம். அது கட்டப்படும் இடத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும். அதேபோல் பச்சை நிறம் நம்முடைய மனதை பிரஷ்ஷாகவும் இலகுவாகவும் வைத்திருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். இனியாவது நரியான காரணத்தை தெரிந்து கொண்டு வீட்டு வாசலில் மா இலை தோரணத்தைக் கட்டுங்கள்.

Read Previous

உங்களிடம் பணம் குவியணுமா..?? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்..!!

Read Next

மூட்டுவலி நீங்க.. வீட்டு வைத்தியம் ..!! கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular