உங்களின் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா..!! அப்போ இதை எல்லாம் செய்யுங்க..!!

இப்போது இருக்கும் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் காரணமாக நமது முகம் பாதிக்கப்பட்டு பொலிவிலந்து கிடைக்கிறது. இந்த பிரச்சனை அனைவருக்கும் உண்டு. அப்படி இல்லாமல் சருமத்தை பொலிவாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அல்லது காபியை குடிக்கும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. அவ்வாறு செய்யாமல் பல சாறு அல்லது சுரைக்காய் சாறு நெல்லிக்காய் சாறு குடிப்பது உகுந்ததாகும். இப்படி குடித்து வந்தால் நமது சருமம் ஈரப்பதமாக பொலிவுடன் இருக்கும். ஒருவேளை அது குளிர்காலமாக இருந்தால் செம்பருத்திப்பூ டீ ஏலக்காய் டீ குடிக்கலாம்.

மேலும் ஐஸ் கட்டி அல்லது ஐஸ்கட்டி கலந்த தண்ணீரை வைத்து முகத்தை கழுவினால் நமது சருமம் பொலிவாக மாறும். ஆனால் உங்களுக்கு சளி பிரச்சனை இருந்தால் இதை தவிர்க்கவும். காலையில் எழுந்தவுடன் சுடுதண்ணீரில் குளிப்பது நமது சருமத்தை விரைவில் சுருக்கம் அடைய செய்யும். ஆகையால் காலையில் எழுந்ததும் சாதாரண தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமில்லாமல் குளித்ததும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் சருமம் பொலிவு இழக்காமல் பாதுகாக்கப்படும்.

மேலும் சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக குளியல் பொடி பயன்படுத்தி குளிப்பது சருமத்திற்கு நல்லதாகும். அதுமட்டுமில்லாமல் வாரம் இரண்டு முறை முகத்திற்கு இயற்கை பேஸ் பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.

Read Previous

உண்மையான வரிகள்.. இதயம் பலகீனமானது சிறிய ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியவில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

இந்த ஊறுகாயை யாராச்சும் செஞ்சு இருக்கீங்களா..!! தயிர் சாதத்திற்கு மிகச்சிறந்த சைடு டிஷ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular