உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..!! இதை சாப்பிடுங்கள் போதும்..!!

உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களது உணவில் புரதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் உடல் எடையை குறைக்க ஏதேனும் உணவை தேடுவார்கள். அப்படி இன்று புரதம் அதிகமாக இருக்கும் உடல் எடையை குறைக்க உதவும் உணவை எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.

தேவைப்படும் பொருட்கள்: 

பச்சை மிளகாய் 4

நறுக்கிய வெங்காயம் 1

தேவையான அளவு உப்பு

4 டீஸ்பூன் அரிசி

1 கப் உளுந்து

1 கப் பாசிப்பயிறு

1 டீஸ்பூன் கொத்தமல்லி

1 கைப்பிடி அளவு வெந்தயம்

பெருங்காயப்பொடி

பச்சை மிளகாய்

செய்முறை:

இதை செய்ய காலையில் மாவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உளுந்து அரிசி வெந்தயம் பாசிப்பயிறு ஆகியவற்றை சேர்த்து நான்கு மணி நேரம் ஊறிய பின்பு தண்ணீரை சேர்த்து அரைத்து மீண்டும் நான்கு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

அதன் பின்பு பச்சை மிளகாய் உப்பு பெருங்காயம், வெங்காயம் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அதில் எண்ணெய் ஊற்றி அடையாக சுட்டு சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவும் உணவு தயார்.

Read Previous

இந்த தின்பண்டத்தை வீட்டில் செய்து கொடுத்தால் நொடியில் காலியாகி விடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

இந்த சிறு சிறு தவறுகளை குறைத்து விட்டால் உங்களது வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும்..!! அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular