நாம் செய்யும் குட்டி குட்டி தவறுகளால் நமது உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பொதுவான தவறுகளை குறைத்து ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. சிலருக்கு தூக்கத்திலேயே தண்ணீரின் தாகத்தினால் முழிப்பு வந்துவிடும். ஆகையால் டிஹட்ரேஷன் என்பது மிகவும் அவசியம்.
தினமும் வெறும் வயிற்றில் காலையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். ஆனால் சாப்பிட்டவுடன் பல்லை துலக்கக்கூடாது.
அப்படி செய்தால் பல் சிப்பியின் பாதுகாப்பு அடுக்கு சேதமாகும். ஆகையால் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து பல் துலக்குவது அவசியம். நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்காக 30 அல்லது அதற்கு மேல் பட்ட எஸ் பி எஃப் கொண்ட கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.
இரவு நேரத்தில் மொபைல் உபயோகித்தால் தூக்கம் கெடும். ஆகையால் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் உபயோகிக்க கூடாது. இதற்கு பதில் தியானம் செய்வது ஒரு நல்ல தீர்வாக அமையும்.




