இன்றளவில் பல பேர் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்க பொலிவு பெற அழகு சாதன பொருட்களை வாங்கி உபயோகித்து வருகின்றனர். ஆனால் இதில் நன்மைகள் ஒன்றும் பெரிதாக கிடையாது. இதற்கு பதிலாக இயற்கையாக முகப்பொலிவை அதிகரிக்கும் முறையை இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
கடலை மாவு பாசிப்பருப்பு ரோஜா வெட்டிவேர் கோரைக்கிழங்கு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றுடன் ஆவாரம் பூவினை அதே அளவில் எடுத்துக்கொண்டு வசம்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். உடலுக்கு சோப் தேய்ப்பதற்கு பதிலாக இந்த கலவையை தயார் செய்து தேய்த்து குளித்து வரவேண்டும். அப்படி செய்தால் நமது சிரமம் பொன் நிறத்துடன் அழகாக மாறும்.
சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் விரைந்து மறைய இது உதவி செய்யும். மேலும் தேமல் போன்ற பிரச்சனைகள் சரியாகி சரும சுருக்கங்கள் இல்லாமல் போய்விடும். மேலும் ஆவாரம்பூவை தேநீர் போல குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும். தலையில் ஏற்படும் வழுக்கை குறைய ஆவாரம்பூவை சாராக்கி சுண்டைக்காய்ச்சி தேங்காய் எண்ணெயோடு சேர்த்து தலையில் தேய்த்து வர வேண்டும்.




