நம்மில் பல பேருக்கு ரசம் என்றால் மிகவும் பிடிக்கும். இதை சாப்பிடுவதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என்பதும் உண்மைதான். சளி மற்றும் காய்ச்சல் தொல்லைகளுக்கு இது ஒரு சரியான தீர்வாக பார்க்கப்படுகிறது. இந்த ரசத்தை சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
மிளகு – ஒரு ஸ்பூன்,
சீரகம் – ஒன்றை ஸ்பூன்,
பூண்டு – பத்து பல்,
பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
புளி – எலுமிச்சம் பழம் அளவு,
கொத்தமல்லி, கறிவேப்பில்லை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 4,
பச்சை மிளகாய் – ஆறு,
எண்ணெய் – தேவையான அளவு,
தக்காளி – நன்றாக பழுத்தது நான்கு…
செய்முறை:
மிளகு சீரகம் சிறிதளவு வெந்தயம் இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பூண்டை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எலுமிச்சம் பழம் அளவு புளியை கரைத்து கொள்ளவும்.
இதில் உப்பு மஞ்சள் தூள் தக்காளி நான்கு பச்சை மிளகாய் இரண்டு கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து எண்ணெய் விட்டு சூடான பிறகு கடுகு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
இதனுடன் கொத்தமல்லி பெருங்காயத்தூள் அரைத்து வைத்திருக்கும் மிளகு சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அதனுடன் பாத்திரத்தில் பிசைந்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்த்து தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
நுரை வந்த பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு கொத்தமல்லி எடுத்து சிறிதளவு மேலே தூவி விட்டு தண்ணீர் ஊற்றி இறக்கி வைக்கவும். அவ்வளவுதான் சூடான சுவையான ரசம் தயார்.




