நமது வீடுகளில் முதல் நாள் வைத்த சாதம் மீதமானால் அதை கீழே கொட்டும் பழக்கம் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இன்று அந்த மீதமான சாதத்தை வைத்து மிக சுவையாக இருக்கும் பாயாசத்தை எப்படி செய்வது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
நெய் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – 3/4 கப்,
தண்ணீர் – 1 கப்,
பால் – ஒரு கப்,
மீதமான சாதம் – ஒரு கப்,
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சூடாகிய பின் முக்கால் கப் சர்க்கரையை அதில் சேர்க்கவும். அது நன்கு பொன்னிறமாகும் வரை கொதிக்க வைக்கவும். சர்க்கரை பொன்னிறமான பின் கெட்டியாக வர வைக்கவும். அதன்பின் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் கெட்டியான பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இது அனைத்தும் நன்றாக கொதித்த பின்பு நமது வீட்டில் இருக்கும் மீதமான சாதத்தை அதில் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். அதன்பின் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான பாயாசம் தயார்.




