உங்க மகனுக்கு திருமணம் முடித்து வைக்கப் போறீர்களா..?? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Oplus_131072

உங்க மகனுக்கு திருமணம் முடித்து வைக்கப் போறீர்களா?? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்…

#திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் ஆனால் இன்று ஆயிரம் காலத்துப் பயிர் அல்ல… அன்றாட வாழ்க்கை போகுவதே பெரிய பாடாக இருக்கிறது இன்றைய தலைமுறையினர்க்கு…

உங்க மகனுக்கு திருமணம் முடித்து விட்டால் உடனே தனிக்குடித்தனம் அமர்ந்தி விடுங்கள் அதுதான் நல்லது….

உங்க கூட பொறந்த சொந்த அண்ணன் பொண்ணை தன் மகனுக்கு திருமணம் முடித்து இருந்தாலும் உங்க வீட்டுக்கு அவள் #மருமகள் தான்..

அத்தை பாசம் உறவு கொஞ்ச நாள் இனிப்பாக இருக்கும் அதற்கு பிறகு கசப்பு வந்துவிடும்..

நாங்கல்லாம் கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம். அதேபோல எனது மகனும் எனது மருமகளும் எங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்காதீர்கள்..

உங்களுடைய காலத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தீர்கள் ஆனால் இன்றைய தலைமுறையினர் யாரும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை
ஆண் பெண் உட்பட..

உங்களுக்கு எப்படி குடும்பத்தை நிர்வாகிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறதோ.. அதே போல தான் உங்களுடைய மருமகளுக்கும் இருக்கும் இது என் குடும்பம் என் குடும்பத்தை நான் தான் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆசை அவளுக்கு வரும்…

அந்த ஆசை அவளுக்கு நிறைவேறாமல் போகும்போது குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகிறது..

எல்லா பெண்களும் திருமணம் முடிந்து விட்டால் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
தனிக்குடித்தனம் சென்றால் தான் சுதந்திரமாக இருக்கிறோம் என்று கருகிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் சுதந்திரம் இல்லாமல் ஒருவருக்கு அடிமை போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்….

கூட்டுக் குடும்பமாக இருக்கும் குடும்பத்தில் தன் கணவனை ஆசையாய் கட்டி பிடிக்க முடியாது ஏனென்றால் வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு முன்னால் செய்வது அநாகரிகமாக நினைப்பார்கள்.
இந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகளை தனி குடும்பமாக இருந்தால் தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும்
என்று நினைக்கிறார்கள்.

உங்க மகனும் மருமகளும் சந்தோசமாக வாழாமல் இருப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்…

நான் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது தான்.. ஆனால் ஏற்றுக் கொண்டால் உங்க குடும்பம் சந்தோஷமாக இருக்கும். உங்க மகனும் மருமகளும் சந்தோசமாக இருக்க கூடும்..

Read Previous

இந்த 5 உண்மை தெரிஞ்சா நீங்க இனிமேல் கால கீழ தொங்கப்போட்டு சாப்பிடவே மாட்டீங்க..!!

Read Next

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular