உங்க வீட்டில தயிர் இருக்கா அப்போ கண்டிப்பா ஒருமுறையாவது இந்த தயிர் குழம்ப ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

தயிர்க்குழம்பு செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் – 2 கப், அரிசி மாவு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி, மிளகாய்த்தூள்-2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – கொஞ்சம், கொத்தமல்லி இலை – கொஞ்சம் .
செய்முறை: தயிரை கரண்டியால் நன்றாகக் கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.எண்ணெயை சூடு செய்து அதில் கடுகு போட வேண்டும். கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயத் தூள்,

கரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளற வேண்டும். இது கொதிக்கும்போது, தயிரை அதில் ஊற்றி நிறம் மாறும்வரை கிளற வேண்டும். பின்பு அரிசி மாவை அரை மேசைக்கரண்டி நீர் விட்டு கரைத்து குழம்பில் ஊற்றி கிளற வேண்டும்.
குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். அதனுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாற வேண்டும்.

 

Read Previous

கொய்யா உடல் நலத்திற்கு நல்லதுதான்.. ஆனால் இவர்களெல்லாம் தொடவே கூடாது..!!

Read Next

பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு இப்பதிவு சமர்ப்பணம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular