பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு இப்பதிவு சமர்ப்பணம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

*முதுமை + தனிமை= கொடுமை !*

*பிள்ளையை… பெண்ணை… பெற்று, வளர்த்து, படிக்க வைத்து…, ஆளாக்கி…, மணமுடித்து… வைக்கிறோம்!*

*வேறு ஊரில்…, வேறு மாநிலத்தில்…, வேறு நாட்டில்… வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்…*

*இங்கு… 70 வயதிற்கு மேல்… வாழ்ந்த வீட்டிலேயே தனிமை…*

*இங்குதான் என் மகள் படிப்பாள்…*

*இங்குதான் விளையாடுவாள்…*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்…*

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து….*

*என்ன சமைப்பது?…*

*என்ன சாப்பிடுவது?…*

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது…*

*தனிமை… வெறுமை…*

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்…*

*பயணம் ஒரு கொடுமை…*

*லோயர் பர்த் கிடைக்கவில்லை – என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்…*

*சென்னை சென்ட்ரல் – போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது…*

*ஓலாவும், ஊபரும்…*

நமக்கு தேவைப்படும் நேரத்தில்,

*பீக் hour சார்ஜ்*

போட்டு களைப்படைய

செய்கின்றனர்…

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்….*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற… இறங்க… கைப்பிடி கேட்கிறது…*

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்…*

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி…

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்…*

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்…*

என்றால்…

அந்த நேரம் அவர்கள்…

*ஏதோ ஒரு மாலில்…*

*ஏதோ ஒரு ஓட்டலில்…*

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்…*

*பிசியாக இருப்பார்கள்…*

*”ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா…” என்பார்கள்…*

*”இல்லை” என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்…*

*நாலு நாள் கழித்து…*

*”எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?” என்று கேட்பர்…*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்…

*அவர்கள் டைமிற்கு…*

*நம் தூக்க நேரம்…*

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்…,*

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*

*மூன்று வயது வரைதான் தாத்தா… பாட்டி… என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்…*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்…*

*அவன் வெளியே விளையாடறான்…*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்…*

*அவன் டியூஷன் போயிருக்கான்…*

*யோகா போயிருக்கான்…*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்…*

*எப்போதாவது குழந்தை முகம்… ஃபோனில்… வீடியோ காலில்…*

*முகத்தைக் காட்டி… ஹாய்… என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு…*

*ஓடி விடும்…*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?…*

*நமது பண்பாடு… கலாச்சாரம்… தாத்தா பாட்டி உறவுகள்…*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!…*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது…?*

*இந்த அரசியல்களும்…*

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!…*

*என் சொந்த வீடே… எனக்கு அனாதை இல்லமாகிப் போனது…*

*ஏதோ… வாட்சப்… Facebook… இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது…!*

*மகனும், மகளும் போடும் Status-தான்… என் அன்றாட சுவாரசியங்கள்…*

*”எப்படிப்பா இருக்கே?” என்று மற்றவர்கள் கேட்கும்போது…*

( விட்டுக் கொடுக்க முடியுமா… என் பிள்ளைகளை…)

*”எனக்கென்னப்பா… ஜாம் ஜாம்ன்னு… பசங்களோட…, பேரனுங்களோட… அட்டகாசமா…”*

( மனதுக்குள் *ஏதோ…*)

*வாழ்கிறேன்!*

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு இப்பதிவு சமர்ப்பணம்…!!!🙏🏻🙏🏻🙏🏻

Read Previous

உங்க வீட்டில தயிர் இருக்கா அப்போ கண்டிப்பா ஒருமுறையாவது இந்த தயிர் குழம்ப ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

ஒரே ஒரு தேங்காய் இருந்தால் போதும்.. ஒரு மணி நேரத்தில் ஐஸ்கிரீம் ரெடி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular