உங்க வீட்ல தேங்காய் அதிகமா இருக்கா அப்போ உடலுக்கு சத்தான தேங்காய் திரட்டுப்பால் இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க..!!

Oplus_131072

தேங்காய் திரட்டுப்பால் செய்வது எப்படி……

தேவையான பொருட்கள்:

1 பெரிய தேங்காய்
1/4 கப் பாசிப்பருப்பு
250 கிராம் பாகு வெல்லம்
300 மில்லி பசும் பால்
7 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை:

1. தேங்காயயை உடைத்து பூவாக துருவிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் பாசிப்பருப்பை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். பின் ஆறவிடவும்.
3. தேங்காய் துருவலோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். நைசாக அரைத்துக் கொள்ளவும்.
4. கனமான கடாயில் தட்டிய வெல்லம், காய்ச்சிய பசும் பால், அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
5. மிதமான தீயில் வைத்து தேங்காய் விழுதை வேகவிடவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
6. திரட்டுப்பால் நிறம் மாறி கெட்டியாகும் போது நெய் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். நெய் மிதக்கும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
7. கடாயின் ஓரங்களில் நெய் பிரியும் போது அடுப்பை அணைத்து விடவும். கடாயின் சூட்டில் அரைமணி நேரம் வைத்து பின் நெய் தடவிய டப்பாவில் வைக்கவும்.

 

Read Previous

தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் உளுந்து..!! உடனே ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

21 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular