21 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி..!!

Oplus_131072

21 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி.

என்னுடைய தொடர் பதிவின் மூலம் இந்த இயற்கை மூலிகை குளியல் பொடியை நம் குழுவில் உள்ள அனேக செயற்கையை தவிர்த்து இயற்கையை நேசிக்கும் தோழமைகள் பயன்படுத்தி நல்ல பலனை அடைந்தது வருகின்றனர் அதுமட்டும்மில்லாமல் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்து வருகின்றனர். அவர்களின் தொடர் வேண்டுகோளின் படி இதனை மீண்டும் பதிவிடுகிறேன்.

பொருட்கள்:

சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை,
மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல்,
பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு.

பயன்கள்:

இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும். இக்குளியல் மாவை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும், முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும் மேலும் தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும் அதுமட்டுமின்றி சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக இருக்கும், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து போகும்.வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உன்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.

இயற்கை மூலிகை குளியல் பொடியை
பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வென்மையாக காணப்படும்.

இந்த இயற்கை குளியல் மாவானது பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. நம் சந்ததியினராவது செயற்கையை தவிர்த்து இயற்கையானதை பயன்படுத்தட்டும்.

குறிப்பு: நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு நாம் பயன்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்த சோப்பிற்கு செலவிடும் பணத்தை விட இயற்கையான குளியல் மாவிற்கு செலவிடும் பணம் மிகவும் குறைவு.

Read Previous

உங்க வீட்ல தேங்காய் அதிகமா இருக்கா அப்போ உடலுக்கு சத்தான தேங்காய் திரட்டுப்பால் இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க..!!

Read Next

இருசக்கர வாகனத்தை வெயிலில் நிறுத்தினால் பொட்ரோல் ஆவியாகுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular