உடனே முடி நீளமாக அடர்த்தியாக வளர.. மூலிகை சீயக்காய்ப் பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி..??

Oplus_131072

உடனே முடி நீளமாக அடர்த்தியாக வளர

மூலிகை சீயக்காய்ப் பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி..

மூலிகை சீயக்காய்ப் பொடி ரெசிபி – 1

தேவையானப் பொருட்கள் :

1.சீயக்காய் – 1 1/2 கிலோ ( நன்கு வெயிலில் காய வைத்தது)

2.பூந்திக்கொட்டை – 200 கிராம்

3. பசலைக்கீரை – 200 கிராம்

4. வெள்ளை கரிசலாங்கண்ணி – 200 கிராம்

5. பொன்னாங்கண்ணி – 200 கிராம்

6. தூதுவளை – 50 கிராம்

7. வல்லாரை – 50 கிராம்

8. பச்சைப் பயறு – 400 கிராம்

9. கருஞ்சீரகம் – 100 கிராம்

10. வெந்தயம் – 100 கிராம்

11. கார்போக அரிசி – 50 கிராம்

12.வெட்டி வேர் – 50 கிராம்

13. பன்னீர் ரோஜா – 50 கிராம்

14. துளசி – 50 கிராம்

15. நீலி அவுரி – 100 கிராம்

16. ஆவாரம் பூ – 100 கிராம்

17. வேப்பிலை – 100 கிராம்

18. மருதாணி – 200 கிராம்

19. கறிவேப்பிலை – 100 கிராம்

20. பெரிய நெல்லிக்காய் – 100 கிராம்

21. எலுமிச்சைத் தோல் – 15 எண்ணங்கள்

22. செம்பருத்தி பூ – 100 கிராம்

23. செம்பருத்தி இலைகள் – 100 கிராம்

24. பூலாங்கிழங்கு – 100 கிராம்

இவை எல்லாமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி காய வைத்து மெஷினில் அரைக்க கொடுத்து எடுத்து வந்து பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தோம் என்றால் இரண்டு மூன்று வருடங்கள் வரை நன்றாக இருக்கும். தலைக்குளிக்கும் முதல் நாள் முடியில், முடி வேரில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து மறுநாள் இந்த மூலிகை சீயக்காய்ப் பொடி தண்ணீர் விட்டுக் கலந்து தேய்த்து தலைக் குளித்து வந்தால் முடி நன்கு வளரும். முடி கம கமவென்று வாசனையாக இருக்கும். என் அம்மா இந்த மாதிரி சீயக்காய்ப் பவுடர் செய்து வைப்பார்கள். நான் வாரா வாரம் முதல் நாள் இரவு முடிக்கு எண்ணெய்த் தேய்த்து மறுநாள் இந்த சீயக்காய்த் தூள் தேய்த்து தலைக் குளிப்பேன். மீரா சீயக்காய் விளம்பரத்தில் வரும் பெண் போல எனக்கு முடி சாப்ட்டாக சில்கியாக நீளமாக அடர்த்தியாக நன்றாக வளர்ந்தது. என் தோழியின் தங்கை அடிக்கடி கேட்பாள் நீங்கள் தான் மீரா சீயக்காய் விளம்பரத்தில் நடித்துள்ளீர்களா என்று கேட்பாள். அம்புட்டு நீளமாகவும் சைனியாகவும் அடர்த்தியாகவும் சாப்ட்டாகவும் என் முடி இருக்கும். இரண்டு புள்ள பெத்தேன் எல்லாம் அதுகளுக்குப் போயிடுச்சு. இப்போது நீளமாக உள்ளது ஆனால் அடர்த்தி இல்லை. இனி இந்த மாதிரி சீயக்காய் தயாரித்து தலைக் குளிக்க வேண்டியது தான். பாராம்பரியத்திற்கு மாற வேண்டியது தான். அப்போது தான் முடி கொட்டுவதை தவிர்க்க முடியும்.

Read Previous

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்..!!

Read Next

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை வைத்திருப்பதற்கான காரணம் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular