இரவு முழுவதும் நம் உடலில் பித்தம் அதிகரித்து காணப்படும். இதை தணிப்பதற்கு காலை நேரத்தில் தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். உணவுப் பொருட்களை பொறுத்தவரை அதிக எண்ணெய் சேர்த்த பொருட்களை சாப்பிடக்கூடாது. பல வைட்டமின்கள் கொழுப்பில் கரைந்து தான் உடலில் சேர வேண்டும். எனவே குறைந்த அளவிலான எண்ணெய் பொருட்களை தினசரி பயன்படுத்தலாம். இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் பித்தத்தை குறைக்கலாம்.




