PCOS பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு இலவங்கப்பட்டை சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதிக அளவு உடல் பருமன், அதிக இன்சுலின் அளவு, இன்ஃப்ளமேஷன் போன்ற பாதிப்புகள் காணப்படுகிறது. இதற்கு இலவங்கப்பட்டை உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது. எடையை பராமரிக்க உதவுகிறது. அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.




