உடலுறவு கொள்வது போல் கனவு வருகிறதா?.. மருத்துவ ஆய்வுகளின் படி..!!
உடலுறவு கொள்வது போல கனவு வருவது சகஜமான ஒன்றாகும். இது போன்ற கனவுகள் வந்தவுடன் பல சமயங்களில் எழுந்தவுடன் பயம் அல்லது பதட்டம் போன்ற உணர்வுகளை கொடுக்கும். ஒரு சிலருக்கு இதற்கான அர்த்தம் கடைசி வரை புரியாது. சில மருத்துவ ஆய்வுகளின் படி, இந்த கனவுகள் நமது ஆழ் மனதில் உள்ள உணர்வுகளின் வெளிபாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நீங்கள் அன்றாடம் பார்ப்பவர்கள் அல்லது வேறு யாரவது கூட அந்த கனவுகளில் வரலாம். இது அவர்கள் மீது இருக்கும் ஆசையாக கூட இருக்கலாம் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது போன்ற கனவுகள் வந்தால் அதை அப்படியே கனவோடு கனவாக புதைத்துவிட்டு அதை நனவாக்க நினைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.




