உடல் எடை என்பது அவரவரின் உயரத்திற்கு ஏற்ப அதற்கு ஏற்ற எடை இருந்தால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். உயரத்திற்கு மீறிய உடல் எடை அதாவது உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதிகமாக சந்திக்கும் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் நீண்ட நேரம் நிற்க முடியாது நீண்ட நேரம் நடக்க முடியாது நீண்ட நேரம் ஒரு வேலையை தொடர்ந்து நின்றவரே செய்ய முடியாது. இதே போல் நிறைய சிரமங்கள் இருக்கின்றன அந்த வகையில் உடல் எடையை பத்தே நாட்களில் இரண்டு கிலோ எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் இளம் வயதினர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைப்பதில் பல்வேறு காரணங்களால் சிரமப்பட்டு இருப்பினும் சில எளிய முறைகள் மூலமாக நாம் உடல் எடையை குறைக்கலாம். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் தசைகள் வலுப்பெற்று உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இரவில் 7:00 மணிக்கு முன்னரே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் அதுவும் மிகவும் லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இதை பாலோ பண்ணினாலே உடல் எடை குறைவதை நீங்கள் கண்கூட பார்க்கலாம்.மேலும் நொறுக்கு தீனிக்கு பதிலாக சுண்டல் பழங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக் கொண்டால் இவ்வாறு உடல் எடை குறையும். மேலும் தண்ணீர் என்பது உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான ஒன்று. கண்டிப்பாக ஒருவர் குறைந்தபட்சம் ஏழு டம்ளர் தண்ணீராவது குடித்திருக்க வேண்டும். நீர் சரியாக குடிக்கும் பழக்கத்தை நாம் தினமும் பின்பற்றினாலே உடல் எடை குறையும். பகல் நேரத்தில் உறங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இரவிலும் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக உறங்க வேண்டும். ஒரு நாளைக்கு 9000 அடி முதல் 10 ஆயிரம் அடி வரை வாக்கிங் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் ஹெல்தியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வாக்கிங் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் பத்து நாட்களில் உடல் எடை குறைந்து அதற்கான மாற்றத்தை நீங்கள் கண்கூட பார்ப்பீர்கள்.




