உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் சத்தான உணவு முறையை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். இதில் பலர் முழுவதுமாக ரெடிமேட் உணவுகளுக்கு மாறி வருகின்றனர். இதனால் உடல் எடை கூடி சின்ன சின்ன வேலைகள் செய்யக்கூட மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். உடல் எடையை குறைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்.

உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் ஒரு ஸ்பூன் சீரகப் பொடியை சூப்புடன் கலந்து குடிக்க உடல் எடை குறையும். மேலும், ரெண்டு டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிது எலுமிச்சை பிழிந்து தொடர்ந்து மூன்று வாரங்கள் தினமும் காலையில் குடித்து வர விரைவில் உடல் எடை குறைவதை நம் கண்கூட பார்க்கலாம். மேலும் நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால் உடை எடை குறைய வாய்ப்புண்டு. மேலும் அர ஸ்பூன் சீரக பொடியை நீரில் சேர்த்து அதோடு தேன் கலந்து தினமும் குடித்தாலும் உடல் எடை குறையும். இவ்வாறு குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க இது வழிவகைக்கிறது.எலுமிச்சை மற்றும் இஞ்சி போன்றவை உடல் எடையை குறைக்க உதவும் பொருட்களில் மிகவும் முக்கியமானவை. இவற்றையும் சிறகடன் சேர்த்து நாம் உட்கொண்டால் விரைவில் உடல் எடை குறைவதை நம் கண்கூட பார்க்கலாம். இரவுகளில் காய்கறிகளுடன் சிறிதளவு இஞ்சியை துருவி போட்டு எலுமிச்சை சாற்றை பிழிந்து ஒரு ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து கலந்து உட்கொண்டு வர உங்கள் உடல் எடை குறைவதற்கு இது வழிவகுக்கும்.

உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வருகிறது இந்த சீரகம். ஏனென்றால் சீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் ஏராளமானவை.

Read Previous

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா..? படுத்தவுடன் தூக்கம் வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

Read Next

முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதா..? கெட்டதா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular