உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பார்லி கஞ்சை இப்படி குடிங்க..!!

இந்த பார்லி சர்க்கரை நோயாளிகள் டயட்டில் இருப்பவர்கள், , , இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.

அதுமட்டுமின்றி பார்லி நீரை தினமும் குடித்து வந்தால் நம்முடைய ஜீரண மண்டலம் சீராக இயங்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். ஜீரண சக்தியை முறைப்படுத்துவது எடையை குறைப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.

இதனை எப்படி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பார்ப்போம்.

அரை கப் பார்லி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும் (ஒன்றுக்கு மூன்று). இந்த நீரில் பார்லி நன்றாக சாதம் போல மென்மையாக குழையும் வரை வேகவைக்க வேண்டும்.

பார்லி நன்கு வெந்ததும் சாதம் வடிப்பது போல இந்த நீரை தனியே வடித்துக் கொள்ள வேண்டும். இதில் உப்பு மட்டும் சேர்த்து ஆறியதும் கஞ்சி போலவும் குடிக்கலாம்.

தினமும் முறையான உடற்பயிற்சி செய்வதோடு இந்த பார்லி நீரை ஒரு கப் அளவுக்கு குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

Read Previous

பப்பாளி செய்யும் மாயம் என்ன..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Read Next

கல் உப்பில் இதை மறைத்து… வைத்தால் போதும் கோடி கடனும் தீரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular