உண்மையான பாசமலர்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

Oplus_131072

உண்மையான பாசமலர்கள்:

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் ஷேவ் செய்வது #தந்தையின் பாசம்.

மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது #அன்னையின் பாசம்.

பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது #பாட்டியின் பாசம்.

பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது #தாத்தாவின் பாசம்.

தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது #அண்ணனின் பாசம்.

அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது #தங்கையின் பாசம்.

தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது #அக்காவின் பாசம்.

சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்.

சாப்பிட்டேன் என்று #அம்மாவிடமும்,
அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என #அப்பாவிடமும்,
வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என #தங்கையிடமும்,
முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று #தம்பியிடமும் சொல்லிவிடலாம், ஆனால்,
சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடியும்.
இது #நட்பின்_நேசம்.
நம்மில் பலர் இதை கண்டிப்பாக கடந்திருப்போம்.

Read Previous

பொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்..!!

Read Next

நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular