உன்னை பைத்தியமாய்
நேசிக்கும் ஒருத்தியை…🧡🦋✨
உன் எல்லாத் தவறுகளையும்
மன்னிக்கும் ஒருத்தியை
உனக்காக தன் அகந்தையெல்லாம் களையும் ஒருத்தியை …
உன் விருப்பம்போல தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஒருத்தியை ….
உன் துயரங்களில் தூணாய்த்
தாங்கும் ஒருத்தியை ….
உன் காயங்களுக்கு மருந்திடும்
ஒருத்தியை….
உன் கனவுகளை தன் கனவாக
நினைக்கும் ஒருத்தியை ….
உன் மகிழ்வில் தான் மகிழும்
ஒருத்தியை…..
உன் வெயிற் காலங்களில் நிழல்
தரும் ஒருத்தியை …..
உனக்கான பலிப்பீடங்களில்
தன் தலை கொடுத்துத்திரும்பும்
ஒருத்தியை …..
அவ்வளவு எளிதாய்
உன்னால்
கடந்துவிட முடியுமா என்ன….
உண்மையில்
அவளன்றி
உன் வாழ்வென்பது
ஒரு வெற்றுக்காகிதம்தான்
இல்லையா…..
தவிர
அத்தனைக்குப்பின்பும்
உன்னையே
பைத்தியமாய் நேசிக்கும்
ஒருத்தி….
அவளுக்கு முன்னென
உன் வாழ்வில் எதுவுமே
இல்லையென
உன்னை நம்பச்செய்கிறாள்
போலவே
அவளுக்குப் பின்னென
உனக்கொரு வாழ்வே
இல்லையென்றும்
உன்னை அவள்
மனதார நம்ப வைக்கிறாள்….
பின்னும்
உன்னை பைத்தியமாய்
நேசிக்கும் ஒருத்தி
தன் நேசத்திற்காக
எல்லாவற்றையும்
விடத்துணிகிறாள்….
இறுதியில்……..
உணர்வும் மனசும் இறந்து
நடைப்பிணமாய் விழிகளில் கண்ணீரோடு தன் இறுதி நாட்களை நோக்கி……🦋🧡✨




