ஒரு சில குடும்பங்களில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் விரைய செலவுகள் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு பணம் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் மன நிம்மதி போன்றவை இல்லாமல் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்பட கூட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் வீட்டில் உள்ள பணப் பிரச்சனை தீர்வதற்கு இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். வீட்டில் உள்ள பண பிரச்சனை தீர்ந்து வரவு அதிகரிக்கும்.
வீட்டில் உள்ள பண பிரச்சனை தீர்வதற்கு எளிய பரிகாரம்:
உப்பு கிராம்பு பரிகாரம் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் உள்ள பண பிரச்சனையை சரி செய்யலாம். அதற்கு முதலில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் கள் உப்பை நிறைத்து நாளை 5 கிராம்பை சொருகி வீட்டில் எந்த மூலையில் வேண்டுமானாலும் வைக்கலாம். இதனால் வீட்டில் பணம் அதிகம் சேரும். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பி காணப்படும். இந்த உப்பு கிராம்பு பரிகாரம் மிகவும் எளிதான பரிகாரம் தான். பணப் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.




