காஞ்சிபுரம் கூவத்தூர் அருகே, பெட்ரோல் பங்கில் கல்லூரி மாணவரிடம் வம்பிழுத்த விசிக நிர்வாகி ரகு, மதுபோதையில் அவரிடம் அடிவாங்கிய சிசிடிவி காட்சி கடந்த மே மாதத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சிசிடிவி காட்சியை வெளியிட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகன் ராஜை, அவமானத்திற்கு பழி தீர்க்கும் நோக்கில் ரகு வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய ரகு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.




