உருளைக்கிழங்கு வருவலை இப்படி செய்து பாருங்கள்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

நம்மில் பல பேருக்கு உருளைக்கிழங்கு பொரியல் என்றால் நிச்சயமாக பிடிக்கும். இதனை இன்னும் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 2
கடுகு, சீரகம்- 1/2 டீஸ்பூன்
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை பாதி அளவு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து உருளைக்கிழங்கை மட்டும் தனியாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாலித்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பச்சை வாசனை போன பிறகு மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். கடைசியாக உருளைக்கிழங்கை அதில் சேர்த்து பிரட்டி தண்ணீர் நன்றாக குறைந்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் உருளைக்கிழங்கு வருவல் தயார்.

Read Previous

பச்சை வெங்காயத்தை சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா..!! இந்த பதிவை நிச்சயம் படியுங்கள்..!!

Read Next

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)-யில் அசத்தல் வேலைவாய்ப்புகள்..!! 615 காலிபநிடங்களுடன் அடித்தது ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular