நாம் சாப்பிடும் உணவுகளில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள் தான் வெங்காயம். இதில் பல நன்மைகள் அடங்கியிருக்கிறது. ஆனால் இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா என்று கேள்வி நமக்குள் நிச்சயமாக இருக்கும். அதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
பச்சை வெங்காயத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். மேலும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவும்.
பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதனால் நமக்கு நார் சத்து அதிகமாக கிடைக்கின்றது. நமது உடலில் ஏற்படும் அலர்ஜியின் அளவை குறைக்க இது மிகவும் உதவுகிறது. வெங்காயத்தில் சல்பர் கலவை அதிகமாக இருக்கும் காரணத்தினால் நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கை வகிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதனால் புற்றுநோயை கூட தடுக்க முடியும். பச்சை வெங்காயத்தை சாப்பிட்டால் தோல் சுருக்கங்கள், உடலில் ஏற்படும் புள்ளிகள் மற்றும் நிறமி அளவை குறைக்க நம்மால் முடியும்.



