உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காணும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!! மைதான உணவுகளின் விலை பல மடங்கு உயர்வு..!!

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை நேரில் அமர்ந்து பார்ப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் கனவாகும். ஆனால், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு, டிக்கெட் விலையைத் தாண்டி மைதானத்திற்குள் விற்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தி அத்தலெடிக்’ வெளியிட்டுள்ள தகவலின்படி, மெட்லைஃப் மைதானத்தில் விற்கப்படும் ஹாட் டாக், பீர், காக்டெய்ல் உள்ளிட்ட உணவு மற்றும் பானப் பொருட்களுக்கு அதிக அளவிலான பிரீமியம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெறும் பரிசளிப்பு விழா, கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் காரணமாக ரசிகர்கள் நீண்ட நேரம் மைதானத்திற்குள் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அங்குள்ள உணவு மற்றும் பானங்களை வாங்க வேண்டிய கட்டாயம் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

ஒரு முழுமையான உணவு காம்போ வாங்குவதற்கு இந்திய மதிப்பில் சுமார் ₹1,829 (19 டாலர்) வரை செலவாகிறது. ஒரு சாதாரண குடிநீர் பாட்டிலின் விலை ₹481 (5 டாலர்) என்றும், கோகோ கோலா, ஸ்ப்ரைட் போன்ற குளிர்பானங்கள் ₹577 (6 டாலர்) என்றும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல், டெலி சாண்ட்விச்சின் விலை சுமார் ₹1,540 ஆகவும், சீஸ் பீட்சாவின் விலை ₹1,059 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களை வாங்கும் ரசிகர்களுக்கு செலவு மேலும் அதிகரிக்கிறது. ஒரு கேன் பீருக்கு ₹1,540 முதல் ₹1,636 வரையிலும், காக்டெய்ல் பானங்களுக்கு சுமார் ₹1,829 வரையிலும் செலவிட வேண்டியுள்ளது.

ஒரு ரசிகர் இடைவேளையில் ஒரு ஹாட் டாக், பிரஞ்ச் பிரைஸ் மற்றும் ஒரு பீர் வாங்கினாலே சுமார் ₹3,128 வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உலகக்கோப்பை நடைபெறும் மற்ற மைதானங்களுடன் ஒப்பிடும்போது மெட்லைஃப் மைதானத்தில் குடிநீர் மற்றும் குளிர்பானங்களின் விலை ஓரளவு குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிஃபா அனைத்து மைதானங்களுக்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணய முறையை கொண்டுவராமல், ஒவ்வொரு மைதானத்திலும் உள்ள உள்ளூர் உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கே விலை நிர்ணயிக்கும் சுதந்திரம் வழங்கியிருப்பதே இந்த விலை வேறுபாட்டுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

Read Previous

சிரிப்பை அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரிச்ச ரோஹித்..!! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வைரல் வீடியோ..!!

Read Next

4 மாதங்களாக சம்பளம் இல்லை.. நிதி நெருக்கடியில் சிக்கிய ஊர்க்காவல் படை வீரர்கள்: தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular