ரோபோட் வேக்யூம் கேமராவால் சிக்கிய கணவர்: இழப்பீடு பெற்றும் 5 மாத சிறை!

 

தைவானில் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை நிரூபித்து நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்ற கணவருக்கே தற்போது 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியின் தனிப்பட்ட தருணங்களை, வீட்டில் பயன்படுத்திய ரோபோட் வேக்யூம் கிளீனரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் கணவர் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சிகளை மனைவியின் தொடர்பை நிரூபிக்கும் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் அவருக்கு இழப்பீடும் கிடைத்தது. ஆனால், தனது அனுமதியின்றி தனிப்பட்ட தருணங்களைப் பதிவு செய்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது தனியாக வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் ரகசியப் பதிவு குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனைவியின் செயலுக்காக இழப்பீடு பெற்ற அதே கணவர், ரகசியமாகக் காட்சிகளைப் பதிவு செய்ததற்காக சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read Previous

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, அகவிலைப்படி 10% உயர்வு!

Read Next

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.35-க்கு விற்பனை: அரசு அதிரடி நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular