உளுந்தங்கஞ்சி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்கும்.. என்று சொல்வார்கள் இது உண்மையா..??

Oplus_131072

 

உளுந்தங்கஞ்சி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்கும். முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்

தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)

பச்சரிசி – அரை டம்ளர்

வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

பூண்டு – 20 பல்

வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல்

தேங்காய் – அரை மூடி

செய்முறை:

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.

தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.

சத்தான உளுந்தங்கஞ்சி ரெடி.

Read Previous

வியக்க வைக்கும் வேர்கடலை..!! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை..!!

Read Next

மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் வைட்டமின் டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular