ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு..!! 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு 25 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ( ஆண்கள் மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Tamilnadu Home Guard
காலியிடங்கள் 25
வேலை இடம் திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2025

விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அவருடைய இருப்பிடம் (Address) திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SSLC 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பொதுநல சேவை, மற்றும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ள நபராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து ( நகல் மட்டும்) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம்.

பிறப்பு சான்றிதழ்

ஆதார் அட்டை

கல்வி தகுதி சான்றிதழ்

சமீபத்திய புகைப்படம் – 2 (Passport Size Photo)

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி தேதி: 15.01.2025

சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Read Previous

தங்கம் வீட்டில் தங்கவில்லையா..!! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம்..!!

Read Next

உடல் எடையை குறைக்க உதவும் பூசணிச் சாறு..!! பயன்கள் ஏராளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular