2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த ஊதியக் குழு குறித்து பல்வேறு வதந்திகள் மற்றும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு அரசிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு மாதந்தோறும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் “12 மாத அகவிலைப்படி மற்றும் நிவாரணத்திற்கு பதிலாக 3 மாத கால அடிப்படை முறையில் வழங்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக” கூறப்படுகிறது. இதனால் மற்ற அரசுத் துறை ஊழியர்களும், “வங்கி மற்றும் LIC ஊழியர்களை போல ஒவ்வொரு 3 மாத இடைவெளியில் பணவீக்கத்திற்கு ஈடாக DA அல்லது DR பெறுவார்கள்” என எதிர்பாக்கப்படுகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வரும் எட்டாவது ஊதியக்குழுவில் வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி மாற்றியமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்காலத்தில் பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்ட திருமணங்களில் கூட “மணமுறிவு” ஏற்படுவது ஏன்?..




