கேஸ் லீக் ஆனா உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!
இந்த காலகட்டத்தில் அனைவரும் கேஸ் அடுப்புகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், கேஸ் லீக் ஆனா உடனே என்ன செய்ய வேண்டும் என்பது நம்மில் சிலருக்கு தான் தெரியும். பலருக்கு தெரியாது. இந்தநிலையில் கேஸ் லீக் ஆனால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கேஸ் லீக் ஆனா அதாவது வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டால் உடனே அடுப்பு மற்றும் ரெகுலேட்டரை அணைக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் செல்போன் போன்ற எலக்ட்ரிக் டிவைஸ்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினாலும் அடுப்பை விட்டு தூரமாக சென்று பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள எந்த ஒரு சுவிட்சுகளையும் ஆன் மற்றும் ஆப் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. உடனே வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வைக்க வேண்டும். இதனால் வாயு கசிவு வெளியே சென்று விடும். ஆபத்துக்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியும். கண்டிப்பா இதையெல்லாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.




