முருங்கை பூக்கள்..
நீண்ட நாட்கள் காய்கள் காய்க்கவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் மரத்தை வெட்ட சொன்னார்கள்.
நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறினேன்
வளராத மரம் ஒன்றும் இல்லை
காய்ப்பு வைக்காமல் அது இறக்கப் போவதுமில்லை.
காய் வைக்காவிட்டாலும் பரவாயில்லை முருங்கை இலைகளை கீரையாக பயன்படுத்திக் கொள்வோம் விடுங்கள் என்று சொல்லி 30 நாட்கள் கூட ஆகவில்லை.
31 வது நாள் பூக்கள் பூக்கத் தொடங்கியது.
நான் நம்பிக்கையுடன் சொன்னது அதன் காதுகளில் விழுந்திருக்கும் போலிருக்கிறது..!!
எந்த ஒரு செடியாக இருந்தாலும் மரமாக இருந்தாலும்
அதனை நேசித்துவளருங்கள்
நிச்சயம் உங்களை அது கைவிடாது…
மனிதர் மீது வைத்த நம்பிக்கை கூட பொய்த்து விடுகிறது .. மரம் மீது வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை..




