பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 27) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி நெல் கொள்முதலில் மோசடி செய்துள்ளதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நெல் வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசே பணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், உழவர்களை திரட்டி எனது தலைமையில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.




