எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!

 

 

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில், எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.

 

பேரவை வளாகத்திற்குள் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன் அனுமதி அவசியம் என்றும், சம்பந்தப்பட்ட கைது குறித்து மாவட்ட எஸ்.பி. தமக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

மேலும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டால், சட்டவிதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Read Previous

பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

Read Next

தடியடியில் காயமடைந்த இளைஞர்களை மருத்துவமனையில் சந்தித்தார் ராகுல் காந்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular