நம் உடலுக்கு சத்துக்களை கொடுக்கும் உணவுகளை அவ்வப்போது நாம் சாப்பிடுவது, உடல்நலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில், இன்று எளிமையான முறையில் புதினா சாதம் செய்வது எப்படி என இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
வடித்த சோறு – 2 கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
மிளகு – 2 கரண்டி,
கிராம்பு – 3,
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு,
நறுக்கிய வெங்காயம் – 2,
புதினா நறுக்கியது – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்த பின் மிளகு, கிராம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இவை வதங்கியப்பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் புதினா இலைகளை சேர்த்து சிறிது வதக்க வேண்டும். புதினா வதங்கியதும் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். அவ்வளவுதான் எளிமையான முறையில் சுவையான புதினா சாதம் தயார்.




