தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது சுவாமி வழிபாடு நடைபெற்று வருவதின் காரணமாக, அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று ஆகும். மேலும், புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அவர் கூறியது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் காரணமாக வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை”.
இந்தநிலையில்,“ திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் காரணமாக வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்”. மேலும், “இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருநெல்வேலியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்க உத்தரவிட்டுள்ளார்”.




