எழுத்தர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு..!! இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

IBPS RRB Recruitment 2025 அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் பிராந்திய ஊரக வங்கிகளில் (RRB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக IBPS (Institute of Banking Personnel Selection) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் இதில் அடங்குகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள கிராம வங்கிகளில்

  • 468 எழுத்தர் (Clerk) பணியிடங்கள்

  • 81 மேலாளர் (Manager) பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் இரண்டு கட்டங்களாக (எழுத்தர்) மற்றும் மூன்று கட்டங்களாக (மேலாளர்) நடைபெறும். முக்கியமாக, தமிழில் தேர்வு எழுதும் வசதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள், இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read Previous

அம்மா என்றொரு பெண்.. அவளும் ஒரு சாதாரண மனுஷி தான், அவளுக்கும் ஆசாபாசங்கள், வேதனை வலிகள் இருக்கும்..!!

Read Next

‘தாய்மாமன்’ உறவு தான்.. உறவுகளில் அழிக்க முடியாத உறவு..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular