ஒன்பது வகை எருக்கனில் இந்த ஒரு வகை ‘எருக்கு’தான் பல நோய்களை குணப்படுத்தும் தெரியுமா..??

Oplus_131072

ஒன்பது வகை எருக்கனில் இந்த ஒரு வகை ‘எருக்கு’தான் பல நோய்களை குணப்படுத்தும் தெரியுமா..

வேரை நெருப்பில் இட்டு, கரியானதும், விளக்கெண்ணையில் கலந்து, உடலில் ஆறாத காயங்கள், பூச்சிக்கடி மற்றும் புண்களில், இந்தக் கலவையைத் தடவி வர, பாதிப்புகள் விரைவில் நீங்கும்.

வெள்ளெருக்கின் இலை, தண்டு, மலர்கள் மற்றும் வேர் அனைத்தும் மருத்துவ பலன்கள் மிக்கவை. எருக்கிலை சாற்றில் தேன் கலந்து சிறிது சாப்பிட, வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

கடுமையான தொழு வியாதி போக்கும் தன்மை வாய்ந்தவை, எருக்க மலர்கள். உலர்த்தி காயவைத்து தூளாக்கிய எருக்க மலர்த்தூளுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் சாப்பிட்டு வர, தொழு வியாதிகளின் பாதிப்புகள் விலகும்.

சில வெள்ளெருக்குப் பூக்கள், சிறிது இஞ்சி மற்றும் மிளகு இவற்றை சற்று அரைத்து, அந்தக் கலவையை இரண்டு தம்ளர் நீர் விட்டு காய்ச்சி, தண்ணீர் ஒரு தம்ளர் அளவுக்கு சுண்டி வந்ததும், ஆற வைத்து, தினமும் இரண்டு வேலை பருகி வர வேண்டும். இதன் மூலமும் சுவாச இரைப்பை குறைக்க முடியும் என்கிறார்கள், முன்னோர்கள்.

உடலில் சரும பாதிப்புகளால் ஏற்பட்ட படை, அரிப்பு மற்றும் சொறி போன்றவற்றில் எருக்கம் பாலைத் தடவி வர, அவை எல்லாம், விரைவில் மறையும். கை கால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்க, எருக்கன் பாலை, வலியுள்ள இடங்களில் தடவி வர, குணமாகும்

தலையணையில் இலவம் பஞ்சுக்கு பதில், எருக்கம் பஞ்சுகளை அடைத்து, அதில் உறங்கி வர, நல்ல உறக்கம் உண்டாகும். மேலும், உறுதியான கயிறுகளைச் செய்ய இதன் நார்கள் பயன்படுகின்றன.

வெண்ணிற எருக்கு மலர்களின் நடுவில் உள்ள நரம்புகளை எடுத்துவிட்டு, மலர்களின் மடல்களை மட்டும் சேகரித்துக் கொண்டு, அத்துடன் மிளகு, கிராம்பு இவற்றை சேர்த்து, நன்கு மைபோல அரைத்து, குன்றிமணி அளவில் சிறு உருண்டைகளாகச் செய்து, ஆஸ்துமா பாதிப்பினால் ஏற்படும் மூச்சிறைப்பின் போது, ஒரு உருண்டை மருந்தை வாயில் போட்டு, தண்ணீர் பருகி வர, இரைப்பு பாதிப்பு விலகும்.

எருக்க இலைகளில் விளக்கெண்ணை தடவி, அதை தீயில் வாட்டி, சூடு பொறுக்கும் அளவில் வந்ததும், உடலில் கட்டி ஏற்பட்ட இடங்களில் வைத்து கட்டி வர, வீக்கங்கள் கட்டிகள் வடிந்து, சருமம் இயல்பாகி விடும்.

எருக்க இலைகளை நன்கு அரைத்து சிறு உருண்டை போல உருட்டி, கொடிய விஷங்கள் ஏறியவர்களுக்கு அளித்து, விஷத்தின் கடுமையையும், வலியையும் குறைக்க முடியும்.

கிராமங்களில் மாடு மேய்க்க அல்லது வேறு வேலையாக வயல் வெளிகளில் செல்லும்போது, பொதுவாக எல்லோரும் செருப்புகள் போடாமலேயே நடப்பார்கள். அந்த நேரங்களில், நெருஞ்சி முள்ளோ அல்லது மூங்கில் முள்ளோ காலில் கூராக ஏறிவிடக் கூடும். இதன் காரணமாக முள் குத்திய இடத்தில், கால் கடுக்க ஆரம்பிக்கும் இதற்க்கு எருக்க இலையைச் செடியில் இருந்து பறித்து, அதை சாறு பிழிய வடியும் பாலை, முள் குத்திய இடத்தில் நன்கு தடவி வைக்க வேண்டும். இதன்மூலம், சதைப்பகுதி இளகி. காலில் தைத்த முள் வெளியேறி விடும். குத்திய இடத்தில் ஏற்பட்ட கடுப்பும் நீங்கி விடும்.

Read Previous

நாம் அனைவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய 10 குறிப்புகள்..!!

Read Next

டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா..?? இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular