ஒருதலைக்காதல் விவகாரம்: மனஉளைச்சலில் இளம்பெண் தற்கொலை..!!

கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், தனது மனைவி ரோஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் அம்மனம்பாக்கம் பகுதிக்கு குடியேறியுள்ளார். இவரது மூத்த மகள் ரேவதி (23).

அம்மனம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரேவதிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்துள்ளார். ரேவதி காதலை ஏற்க மறுத்த நிலையில், அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆன நிலையில், அவரது தற்கொலைக்கு தானே காரணம் என ரேவதி மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

மகளின் நிலையை உணர்ந்த பெற்றோர், சொந்த வீட்டை காலி செய்து அனுமந்தபுத்தேரி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர். மகளின் மனநிலையை மாற்ற வேலைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பெற்றோர் வழக்கம்போல வேலைக்கு சென்ற நிலையில், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ரேவதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது தாய், மகள் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு காவல்துறையினர் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பல்லடத்தில் காதல் விவகாரத்தில் தாய் – மகள் வெட்டிக்கொலை..!!

Read Next

மலச்சிக்கலை தவிர்க்க உதவும் எளிய வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular