இன்றைய வாழ்க்கை முறையில் மலச்சிக்கல் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதனை அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே சரிசெய்வது நல்லது.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலைத் தடுக்க உதவும். குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நிவாரணம் அளிக்கலாம்.
ஒரு லிட்டர் இளஞ்சூடான நீரில் கால் கரண்டி நெய், பெருஞ்சீரகம், கிராம்பு மற்றும் உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்தவும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், மலத்தை மென்மையாக்கவும் உதவும். மேலும், குடல் இயக்கம் எளிதாகி வாயு, அஜீரணம் மற்றும் வயிறு உப்புசம் குறையலாம்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.




