மகாராஷ்டிரா: நாக்பூரில் 16 வயது மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குல்மோஹரில் நேற்று நடந்தது. இறந்த மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த 18 வயது நிரம்பாத சிறுவன் திடீரென கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் போராடிய மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.




