நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் சோழப் பணியாரம் கேழ்வரகு தோசை, ராகி தோசை , சோள மாவு தோசை, கம்பு தோசை என ஆரோக்கியமான பல வகையான தோசைகளை செய்வார்கள். ஆனால் இன்றோ இந்த நவீன காலகட்டத்தில் அரிசி மாவு தோசை தான் அதிகமாக அனைத்து வீடுகளிலும் செய்யப்படுகிறது. அந்த வகையில் கேழ்வரகு தோசை ஈஸியாக எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
கேப்பை – 3/4 கப்
இட்லி அரிசி – 1/4 கப்
உளுந்து – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை –
கேப்பை , இட்லி அரிசி , உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு அதோடு உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு இதே போல் பொங்கி இருக்கும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து ஊற்றி விரித்து விடவும். வெந்ததும் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான கேப்பை தோசை ரெடி.
கேழ்வரகு தோசைக்கு காரச்சட்னி நன்றாக இருக்கும்…..




