ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன..??

 

தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். முக்கியமாக பிறர் பலவீனத்தை தனக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு கர்வம் கொள்ள மாட்டார்கள். பெருமை பேசுவதற்காக கடன் வாங்கி பொருட்கள் வாங்க மாட்டார்கள்.
நண்பர்களை குடும்ப விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். ஆலோசனை வேண்டுமானால் கேட்பார்கள். முடிவு எப்பொழுதுமே தன்னிடத்தில்.
குறைவாகப் பேசுவார்கள்.
புறம் பேசமாட்டார்கள். எப்படியும் சேரவேண்டியவரிடம் சேர்ந்து விடும் என்பதை அறிந்தவர்கள்.
அரசியல்வாதி/விளையாட்டு வீரர்கள்/ நடிகர்களுக்காக சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்கள். திறமையை மட்டுமே ரசிப்பார்கள்.
வியாபார தந்திரங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். உழைக்காமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவரே தந்திரங்களில் சிக்குவார்கள்.
தோல்விக்குப் பிறகு துவண்டு போகாமல் உடனடியாக அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள். பிறரின் வெற்றியையும் அங்கீகரிப்பார்கள். அக்கறை கொள்வார்கள்.
பொழுதுபோக்கு கூட அவர்களுடைய லட்சியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். தினமும் தன் லட்சியத்தை நோக்கி ஒரு அடியாவது முன்னேறியிருப்பார்கள்.
தொலை நோக்கு பார்வை கொண்டவர்கள். பூங்காவில் அமர்ந்து இருந்தால் கூட, அருகில் இருக்கும் ரோஜாவை ரசிக்காமல், தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் எத்தனை விழுதுகள் என்று எண்ணுவார்கள்.
லேசாக புருவம் நெறித்து, கண்கள் சுருக்கிய கூர்மையான பார்வை கொண்டவர்கள். முக்கியமாக ஏதோ யோசிக்கையில் கண்கள் மூடி யோசிப்பார்கள்.
படித்ததில் வியந்தது.

Read Previous

படித்ததில் பிடித்தது..!! எடை..!!(சிறுகதை) நேரம் இருந்தால் கண்டிப்பாக படித்துப் பாருங்கள்..!!

Read Next

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular